வீட்டில் இருந்த நகை திருட்டு


வீட்டில் இருந்த நகை திருட்டு
x

வீட்டில் இருந்த நகை திருட்டு போனது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே பிசிண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 62), இவர் தனது வீட்டை பூட்டி சாவியை அங்கேயே ஒரு இடத்தில் வைத்துவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 8 ஆயிரத்தை காணவில்லை. இதுகுறித்து பாண்டியராஜ் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story