ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
ஜோலார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கியில் பணம் எடுத்தார்
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள புதுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் தனது உறவினரின் திருமண செலவிற்காக வங்கியில் தனது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு, மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். வங்கியில் ரூ.1 லட்சம் எடுத்துக்கொண்டு அதை ஸ்கூட்டரின் டிக்கியில் வைத்து பூட்டினார்.
பின்னர் துணி எடுப்பதற்காக வக்கணம்பட்டி அருகே உள்ள துணி கடைக்கு சென்றார். அங்கு கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு இருவரும் கடைக்குள் சென்று துணிகளை எடுத்து கொண்டு வெளியே வந்தனர்.
ரூ.1 லட்சம் திருட்டு
பணம் வைத்திருந்த ஸ்கூட்டரின் டிக்கி திறந்து இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கதிர்வேல் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேரா காட்சிகளை ஆய்ரு செய்தனர்.
அதில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த கதிர்வேலை பின் தொடர்ந்து வந்த 3 பேர் பணத்தை திருடிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றது பதிவாகி இருந்தது.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற நபர்கள்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.