மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
x

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் சிவநாராயணன் (வயது 25). இவர் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இவர் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்தார். பின்னர் வெளியே நின்ற தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அது பஞ்சராகி நின்றுள்ளது. உடனே அவர் வங்கியில் எடுத்த ரூ.2 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு ஒர்க்சாப் சென்று பஞ்சர் பார்த்தார். பின்னர் அங்கிருந்து சென்று குரூஸ்பர்னாந்து சிலை அருகே உள்ள வணிக வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கினார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவநாராயணன் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story