நுகர்வோர் சங்க நிர்வாகி வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு


நுகர்வோர் சங்க நிர்வாகி வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு
x

நுகர்வோர் சங்க நிர்வாகி வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

திருப்பனந்தாள் வடக்கு வீதியில் வசிப்பவர் மோகன் (வயது70). இவர் ஓய்வு பெற்ற நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர். மேலும் நுகர்வோர் சங்க நிர்வாகியாகவும் உள்ளார். தனது வீட்டின் முன் பகுதியில் அலுவலகம் வைத்துள்ளார். இந்தநிலையில் வீட்டு வாடகை தொகையாக வசூலித்த ரூ.20 ஆயிரத்தை அலுவலகத்தின் மேஜை மீது வைத்திருந்தார். பின்னர் வந்து பார்த்த போது அந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மோகன் திருப்பனந்தாள் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story