ஆட்டோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு
மார்த்தாண்டத்தில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருடப்பட்டது.
கன்னியாகுமரி
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருடப்பட்டது.
மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு செறுகோட்டுவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் மதியம் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை காணாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மஆசாமி பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து சுரேஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story