கடையில் இருந்த ரூ.41 ஆயிரம் திருட்டு


கடையில் இருந்த ரூ.41 ஆயிரம் திருட்டு
x

கடையில் இருந்த ரூ.41 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்றார்.

திருச்சி

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.பெரியபட்டி பிரிவு சாலையில் வண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் உணவகம் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையின் உள்ளே இரவு நேர காவலாளி இருந்ததால், கடையின் ஊழியர்கள் கடையை பூட்டாமல் கதவை மட்டும் மூடிவிட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் கடையின் உள்ளே புகுந்த மர்மநபர் கடையை நோட்டம் விட்டுள்ளார். சத்தம் கேட்டு காவலாளி எழுந்து வந்து பார்த்தபோது, அந்த மர்ம நபர் மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார். பின்னர் காவலாளி சென்றவுடன் கடையின் உள்ளே நுழைந்த மர்மநபர் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.41 ஆயிரத்தை திருடிச்சென்றார். நேற்று கடையின் ஊழியர் ஆறுமுகம் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் விறகு வாங்க வைத்திருந்த பணம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் கடையின் உள்ளே மர்மநபர் நுழைந்து பணத்தை திருடி விட்டு மீண்டும் வெளியே சென்று தேசிய நெடுஞ்சாலையை நோக்கி ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இது குறித்து கடையின் மோலாளர் எட்வின்ராஜ் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, மணப்பாறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story