துறையூரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.5லட்சம் திருட்டு


துறையூரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.5லட்சம் திருட்டு
x

துறையூரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.5லட்சம் திருட்டு போனது

திருச்சி

துறையூரில் உள்ள முசிறி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவர் துறையூரில் உள்ள பெரிய கடைவீதியில் நவதானிய மண்டி நடத்தி வருகிறார். நேற்று மதியம் துறையூரில் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் எடுத்து மொபட்டில் வைத்து கொண்டு வந்தார். பின்னர் அவர் துறையூர் அண்ணா பஸ் நிலையம் அருகே பிரியாணி கடை முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு பிரியாணி வாங்க சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து மொபட்டில் உள்ள பணத்தை பார்த்த போது, அதனை காணவில்லை. யாரோ அதனை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story