ஊராட்சி மன்ற தலைவர் மொபட்டில் வைத்திருந்த ரூ.6½ லட்சம் திருட்டு
ஊராட்சி மன்ற தலைவர் மொபட்டில் வைத்திருந்த ரூ.6½ லட்சத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்
கே.வி.குப்பம் தாலுகா, வேப்பங்கநேரி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே. மோகன். இவர் சம்பவத்தன்று தனியார் வங்கியில் இருந்து எடுத்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை தனது மொபட் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, அருகில் இருந்த நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் மோகனின் மொபட் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6½ லட்டசத்தை திருடி உள்ளனர். அதைப் பார்த்தவர்கள் சத்தம் போட்டனர்.
உடனே மோகன் உள்ளிட்டோர் அந்த நபர்களை பின் தொடர்ந்து துரத்திச்சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில்சென்று மறைந்துவிட்டனர். இது குறித்து மோகன் கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story