வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் இலுப்புடையான் என்ற சின்னக்கவுண்டர் (வயது 29). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) சரவணகுமார், சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாதுரை, தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். அதையேற்று இலுப்புடையானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story