கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி சீனிவாசபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்க நாராயணன் (வயது 44). இவரை கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் திருக்குறுங்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தங்க நாராயணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஏற்று, தங்க நாராயணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அதற்கான ஆணையை திருக்குறுங்குடி போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று வழங்கினர்.


Next Story