2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மண்வெட்டியால் தாக்கி கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி, ஜூன்.4-
ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.கார்டனில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மண்வெட்டியால் தாக்கி 4 கிராம் தங்கம், ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றதாக மகேஸ்வரன் (வயது 27), அஜித்குமார் (23), ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நடத்தி விசாரணையில் மகேஸ்வரன் மீது 12 வழக்குகளும், அஜித்குமார் மீது 10 வழக்குகளும் ஸ்ரீரங்கம் போலீசில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மகேஸ்வரன், அஜித்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் திருச்சி போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து சிறையில் உள்ள மகேஸ்வரன், அஜித்குமார் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது.