புகையிலை விற்றவர் சிக்கினார்


புகையிலை விற்றவர் சிக்கினார்
x

திசையன்விளையில் கடையில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை உடன்குடி ரோட்டில் மளிகை கடை வைத்து இருப்பவர் சகாய ரமேஷ் (வயது 42). இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி மற்றும் போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விற்பனைக்கு வைத்து இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, சகாய ரமேசை கைது செய்தனர்.


Next Story