டிராக்டர் கவிழ்ந்து மெக்கானிக் பலி


டிராக்டர் கவிழ்ந்து மெக்கானிக் பலி
x

நெல்லை அருகே டிராக்டர் கவிழ்ந்து மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் தங்கபாண்டி (வயது 25). இவர் நெல்லையை அடுத்த பொன்னாக்குடி பைபாஸ் பாலம் அருகில் உள்ள தனியார் டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் நேற்று டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் இருந்து டிராக்டரை வெளியே ஓட்டிச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த தங்கபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story