டிராக்டர் டிராலி கவிழ்ந்தது


டிராக்டர் டிராலி கவிழ்ந்தது
x

குடியாத்தத்தில் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரையில் இருந்து குடியாத்தம் சித்தூர்கேட் பகுதிக்கு இன்று மாலை டிராக்டர் ஒன்று டிராலியில் தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

செதுக்கரை வளைவு அருகே டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த டிராலியின் இரும்பு ராடு உடைந்ததால் திடீரென சாலையில் டிராலி கவிழ்ந்தது இதனால் சாலையில் தேங்காய்கள் சிதறி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலகங்கள் விடும் நேரம் என்பதால் இருபக்கமும் வாகனங்கள் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர்.

பொதுமக்கள் உதவியுடன் சாலையில் சரிந்த டிராக்டர் டிராலியை போராடி நிமிர்த்தினர். மேலும் சாலையில் சிதறி கிடந்த ஆயிரக்கணக்கான தேங்காய்களை சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தினர்.

இதனால் 20 நிமிடங்களுக்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு சீரானது.

போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக வேலூர், பள்ளிகொண்டாவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் விநாயகபுரம் கூட்ரோட்டில் இருந்து காந்திநகர் வழியாக குடியாத்தம் நகருக்குள் மாற்றிவிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஓரளவு குறைந்தது.


Next Story