1 மணி நேரம் தாமதமாக திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்ற ரெயில்
அகஸ்தியன்பள்ளியில் ரெயில் என்ஜின் பழுதடைந்ததால் 1 மணி நேரம் தாமதமாக திருத்துறைப்பூண்டிக்கு ரெயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
வேதாரண்யம்:
அகஸ்தியன்பள்ளியில் ரெயில் என்ஜின் பழுதடைந்ததால் 1 மணி நேரம் தாமதமாக திருத்துறைப்பூண்டிக்கு ரெயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
டெமு ரெயில்
நாகை மாவட்டம் அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி இடையே டெமு ரெயில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் காலை மற்றும் மாலையில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சி இயக்கப்படுகிறது.
என்ஜின் பழுதால் 1 மணி நேரம் தாமதம்
இந்த ரெயில் நேற்று காலை 7 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு அகஸ்தியன்பள்ளிக்கு 7.55 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு 8 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு ஹாரன் செயல்படவில்லை.
இதை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்து பழுதை சரி செய்து ஹாரனை மாற்றினர். பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு திருத்துறைப்பூண்டிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
பயணிகள் அவதி
ரெயில் என்ஜினில் உள்ள ஹாரன் வேலை செய்யாததால் அதை மாற்றியதால் ஒரு மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே துறையினர் தெரிவித்தனர். அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு 1 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.