மரம் வேரோடு சாய்ந்து 3 மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது
வந்தவாசியில் மரம் வேரோடு சாய்ந்ததால் 3 மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.
வந்தவாசி
மாண்டஸ் புயல் காரணமாக வந்தவாசி பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் மழையும் பெய்து வருகிறது.
இதனால் வந்தவாசி ஆரணி சாலையில் இன்று மிகப்பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்தது.
இதில் அருகில் இருந்த 3 மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.
பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இந்த இடத்தில் மரம் வேரோடு சாயும் போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மரம் வேரோடு சாய்ந்ததில் வந்தவாசி-ஆரணி மற்றும் செய்யாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து மின்சார துறை ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மரத்தை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.