பள்ளத்தில் லாரி இறங்கியதால் பரபரப்பு


பள்ளத்தில் லாரி இறங்கியதால் பரபரப்பு
x

பள்ளத்தில் லாரி இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் அன்னவாசலில் பள்ளூரணி அருகே சாலையோரத்தில் ஒரு பள்ளம் உள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக சரக்கு லோடுடன் வந்த லாரியின் டிரைவர் பள்ளத்தை கவனிக்காமல் லாரியை ஓரமாக நிறுத்தியபோது திடீரென லாரி ஒருபக்கமாக பள்ளத்தில் சாய்ந்தது. இதனையடுத்து லாரியின் டிரைவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் லாரியை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story