ஊத்தங்கரை அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்


ஊத்தங்கரை அருகே  சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து  டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
x

ஊத்தங்கரை அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சேலம் உருக்கு ஆலையில் இருந்து, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ஸ்டீல் தகடு ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லியம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24) கிளீனராக உடன் சென்றார். இந்த லாரி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கலைஞர் நகர் அருகில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story