லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 3 பேர் காயம்


லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 3 பேர் காயம்
x

சூளகிரி அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று நேற்று கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை கிருஷ்ணப்பா என்பவர் ஓட்டி வந்தார். ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி பவர்கிரீட் அருகே சென்றபோது, திடீரென லாரியின் முன்பக்க சக்கரம் துண்டாகி, தனியாக கழன்று சாலையில் ஓடியது. இதனால் லாரி, நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் கிருஷ்ணப்பா மற்றும் கூலித்தொழிலாளிகள் 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story