லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
லாரி கவிழ்ந்தது
தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தையில் இருந்து தேங்காய் ஓடு கரிபாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திண்டுக்கல்லுக்கு புறப்பட்டது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் (வயது37) ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர விரைந்து வந்து விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.