சாலையின் தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது


சாலையின் தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பேட்டரிகளில் இருந்து திராவகம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பேட்டரிகளில் இருந்து திராவகம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த டிரைவர் தங்கராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த கன்டெய்னர் லாரியில் பழைய பேட்டரிகளை பழுது பார்த்து ஏற்றி வந்துள்ளார்.

பர்கூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயம் அடைந்தார். மேலும் லாரிக்குள் இருந்த பேட்டரிகளில் இருந்து திராவகம் கசிந்து சாலையில் வழிந்தோடியது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையில் வழிந்தோடிய திராவகத்தை சுத்தம் செய்தனர்.

பின்னர் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பேட்டரிகளில் இருந்து திராவகம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story