100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
பத்தலப்பல்லி மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் - பங்காரு பேட்டையிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வலத்த மங்களம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வேல்முருகன் (வயது 38) ஓட்டிச் சென்றார். தமிழக எல்லையான பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி மலைப்பாதை 3-வது வளைவில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி தடுப்பு சுவரில் மோதி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் வேல்முருகன் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரண
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் கயிறு கட்டி டிரைவர் வேல்முருகனின் உடலை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.