லாரி திடீரென தீப்பிடித்தது


லாரி திடீரென தீப்பிடித்தது
x

கந்தம்பாளைம் அருகே லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.40 லட்சம் மதிப்புடைய பஞ்சு நாசமானது.

நாமக்கல்

கந்தம்பாளையம்

லாரி தீப்பிடித்தது

மராட்டியத்தில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு நூல் மில்லுக்கு கடந்த 20-ந் தேதி 150 பஞ்சு பேல்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாாியை சங்ககிரி உலகப்பனூரை சேர்ந்த உரிமையாளர் முருகன் (48 வயது) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது நள்ளிரவில் திடீரென லாரியின் முன்பகுதியில் புகை வந்ததை கண்டு முருகன் லாரியை நிறுத்தி இறங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் தீ மளமள என பரவி லாரியில் இருந்த பஞ்சி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

பஞ்சு சேதம்

இதுகுறித்து முருகன் திருச்செங்கோடு, நாமக்கல், வேலூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இ்டத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனால் லாரியில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 150 பஞ்சு பேல்கள் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து முருகன் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story