மயங்கி கிடந்த நபர் சிகிச்சை பலனின்றி சாவு


மயங்கி கிடந்த நபர் சிகிச்சை பலனின்றி சாவு
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மயங்கி கிடந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கடந்த 31-ந் தேதி இரவு 3-வது பிளாட்பாரத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்தார். ரெயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story