கடலூர் அருகே சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் சாவு


கடலூர் அருகே  சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் உயிரிழந்தாா்.

கடலூர்


ரெட்டிச்சாவடி,

கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பம் புதுப்பட்டு அய்யனார் கோவில் அருகே நேற்று 35 வயதுடைய வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்தவழியாக சென்றவர்கள் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story