புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்கான பணிகள் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்


புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்கான பணிகள் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
x

புதிய நீர்நிலை குட்டைகள் அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

புதிய நீர்நிலை குட்டைகள் அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அக்ராவரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் வட்டத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 15-வது நிதி குழு மானியத்தில் புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்கு ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் குட்டைகள் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கி புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்காக பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story