100 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கொடி ஏற்றிய மத்திய மந்திரி
ராமநாதபுரம் அருகே 100 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கொடியை மத்திய மந்திரி ஏற்றினார்.
ராமநாதபுரம்
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ராமநாதபுரம் வந்தார். அவருக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கதிரவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈ.சி.ஆர். சாலையில் 100 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கொடி ஏற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி அக்கட்சியின் பிரமுகரும் உயர் நீதிமன்ற வக்கீலுமான சண்முகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பா.ஜனதா கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story