தாலுகா அலுவலகங்கள் முன்பு வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்


தாலுகா அலுவலகங்கள் முன்பு வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x

தாலுகா அலுவலகங்கள் முன்பு வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர்.

வேலூர்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் வேலூர் கொணவட்டத்தில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம், துணைத்தலைவர் அன்பரசன், துணைச்செயலாளர் சுரேஷ், வேலூர் தாலுகா தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் பிரகலாதன் வரவேற்றார்.

இதில் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகள், தீர்மானங்கள், செயல்பாடுகள் குறித்து மாநில பொருளாளர் முத்துசெல்வன், துணைத்தலைவர் நல்லா, செயலாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.

கூட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர் உடனடியாக வழங்கப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு வகிப்பதற்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அடுத்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தாலுகா அலுவலகங்கள் முன்பும், அதைத்தொடர்ந்து 24-ந் தேதி வருவாய் கோட்ட அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் வேலூர் தாலுகா செயலாளர் விஜய், பொருளாளர் யாகண்டிஸ்வரராவ், துணைத்தலைவர் சீனு மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.


Next Story