போக்குவரத்து சிக்னலை மீறிசென்ற வேன் டிரைவர்
போக்குவரத்து சிக்னலை மீறிசென்ற வேன் டிரைவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், மேகநாதன் ஆகியோர் நேற்று காலை சுமார் 9.45 மணிக்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று போக்குவரத்து சிக்னலை மீறி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் வேனை மடக்கி பிடித்தனர். அப்போது வேன் டிரைவர் பென்னாத்தூரை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ப்போது சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை தாக்கியதாக கூறி வேன் டிரைவர் செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வேன் டிரைவரை காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.