முட்டை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது


முட்டை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது
x

அதியமான்கோட்டை அருகே முட்டை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை அருகே முட்டை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேன் கவிழ்ந்தது

நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று முன்தினம் இரவு காரிமங்கலத்திற்கு புறப்பட்டது. வேனை காரிமங்கலத்தை சேர்ந்த டிரைவர் அச்சுதன் (வயது40) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் 2 கூலித்தொழிலாளர்கள் உடன் வந்தனர். அதியமான்கோட்டை அருகே ஜீவா நகரில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். மேலும் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. விபத்து காரணமாக சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story