வேன் கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்


வேன் கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்
x
தினத்தந்தி 3 July 2023 1:22 AM IST (Updated: 3 July 2023 3:27 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வந்து விட்டு திரும்பிய போது ஏற்காடு 6-வது கொண்டை ஊசிவளைவில் வேன் கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 16 பேர் காயமடைந்தனர்.

சேலம்

ஏற்காடு ,

ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்பியபோது 6-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் லேசான காயம் அடைந்தனர்.

ஏற்காட்டுக்கு சுற்றுலா

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள துரைபாடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை அதே பகுதியை சேர்ந்த அஜய்அரவிந்த் (வயது 28) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் மாலை ஊருக்கு புறப்பட்டனர்.

அப்போது 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் எதிரே இருந்த சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக ஏற்காடு மலை பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் அதில் சென்ற சுற்றுலா பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து 6-வது கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story