கிராம ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்


கிராம ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர் என்று சங்க மாநில தலைவர் கூறினார்.

திண்டுக்கல்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் இடையக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோடிக்கணக்கான நிதி கையாளக்கூடிய கிராம ஊராட்சி செயலாளர் பணி இடங்கள் வலுவானதாக அரசு அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே நிதி கையாளுவது சிறப்பாக இருக்கும்.

ஊராட்சி செயலாளர்கள் பணியிடத்தை அரசு பணியாளர்கள் தேர்வு முலம் நியமிக்கப்படவேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்நிலை, காலநிலை ஊதியம் வழங்கவேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வட்டாரத்திற்குள் பணி மாறுதல் வழங்கவேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி அனைத்து அரசு சலுகைகளுடன் ஒய்வூதியம் வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விடுமுறை எடுத்து நாளை (இன்று) சென்னையில் பனகல்பார்க் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாண்டியராஜன், செயலாளர் கர்ணன், பொருளாளர் கந்தசாமி, துணைத்தலைவர் ஜெரால்டுமனோகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story