சுடுகாட்டுக்கு பாதை வசதியில்லாததால் வயலில் பிணத்தை தூக்கி சென்ற கிராம மக்கள்
சுடுகாட்டுக்கு பாதை வசதியில்லாததால் கிராம மக்கள் வயலில் பிணத்தை தூக்கி சென்றனர்.
திருச்சி
காட்டுப்புத்தூர் அருகே எம்.புத்தூர் ஊராட்சியில் உள்ள ரோஜா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லை.
இக்கிராமத்தில் யாராவது இறந்தால் இறந்தவரின் உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வயல்வெளியிலும், ஒத்தையடி பாதையிலும் தூக்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒருவர் இறந்தார். அவரது உடலை கிராம மக்கள் வயல்வழியாக தூக்கிசென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் 3 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால் சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லை. பாதை அமைத்து தர கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story