மயானத்திற்கு செல்ல பாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டம்


மயானத்திற்கு செல்ல பாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 1:39 AM IST (Updated: 27 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

மயானத்திற்கு செல்ல பாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டம்

மதுரை

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சீமானூத்து ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது நல்லிவீரன்பட்டி. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு செல்ல ெரயில்வே பாதையின் குறுக்கே பாலம் அல்லது பாதை அமைத்து தர வலியுறுத்தியும், இதே ஊராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் ரோடு பகுதியில் ெரயில்வே பாலத்தில் தேங்கும் சாக்கடை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் கிராம மக்கள் மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற ரெயிலை உசிலம்பட்டி ெரயில் நிலையத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் மற்றும் மதுரை மண்டல ெரயில்வே போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் மயானத்திற்கு செல்ல பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து ெரயில் மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.


Next Story