ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்த கிராம மக்கள்


ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்த கிராம மக்கள்
x

களக்காடு அருகே ரேஷன் கடை கட்டிடத்தை கிராம மக்கள் சீரமைத்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தில் கடந்த 1994-1995-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் ரேஷன் கடை கட்டப்பட்டது.

இந்த கடையில் பெருமாள்குளம், பொத்தைசுத்தி கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர். அந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதடைந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெருமாள்குளம் மக்கள் மறுமலர்ச்சி சங்க நிர்வாகிகள் கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு செய்தனர்.

அதன்படி சங்க தலைவர் எபநேசர், துணைத்தலைவர் ஜான்சன், செயலாளர் அருமை செல்வன், துணை செயலாளர் அகஸ்டின், பொருளாளர் அந்திரேயா மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களிடம் நிதி உதவி பெற்று ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்தனர். கட்டிடத்தின் வெளிப்பகுதியில் சிமெண்டு பூசப்பட்டு, வர்ணமும் அடிக்கப்பட்டது.

மேலும் கட்டிடத்தின் முன்பு பொதுமக்கள் வரிசையில் நிற்கும்போது அவர்கள் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சீட் அமைக்கப்பட்டது. அத்துடன் இரும்பு கதவும் அமைக்கப்பட்டு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.


Next Story