சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்


சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்   சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
x

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

தேனி

கம்பம் அருகே உள்ள சுருவி அருவி சிறந்த சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. ஹைவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து இங்கு அருவியாக கொட்டுகிறது. தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாரவிடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Related Tags :
Next Story