மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்தது


மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்தது
x

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது.

கரூர்

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராயர் மற்றும் கபினி அணையில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அந்த வெள்ளநீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கு இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு நேற்று வந்தது. பின்னர் அங்கிருந்து திருச்சி நோக்கி செல்கிறது.

இதனால் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், தோட்டகுறிச்சி, மேட்டுப்பாளையம் வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் ஆடு, மாடுகளை காவிரி ஆற்றில் குளிப்பாட்டவும், மீன் பிடிக்கவும், ஆற்றில் நீந்திச் செல்லவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என புகழூர் தாசில்தார் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story