திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்
நெல்லை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மானூர்:
நெல்லை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமண கோஷ்டியினர்
நெல்லையை அடுத்த பேட்டை ரகுமத் நகர் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர்.
நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை கடந்து வேன் சென்று கொண்டிருந்தது.
வேன் கவிழ்ந்தது
அப்போது சாலையின் குறுக்கே திடீரென ஆடு பாய்ந்து ஓடியது. எனவே அதன் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேனின் இடுபாடுகளுக்குள் சிக்கியவர்கள் பலத்த காயமடைந்து கூச்சலிட்டனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
13 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வேனில் இருந்த பேட்டை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (வயது 33), அப்துல்லா (30), ஷேக் மீரான் (8), பீர் பாத்து (60), பீர் மைதீன் (59), மைதீன் அப்துல்காதர் (63), முகமது ரியாஸ் (2), அகமது அஜ்மல் (2), கோதை (3), நூர்ஜகான் பீவி (85) உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.