மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாலை அணிவித்து மரியாதை
அகஸ்தியர் கூட்டத்தில் தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம்
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம்) அணியின் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் அழகர்சாமி கட்சி நிர்வாகிகளுடன் சென்று புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர் கூட்டம் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுபோல் வாலாந்தரவையில் உள்ள மருது சகோதரர்கள் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மேற்கு ஒன்றியத்தின் செயலாளர் அழகர்சாமி அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம்) அணி மேற்கு ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து அக்கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.
Related Tags :
Next Story