கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு


கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 71). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன் தினம் இறந்தார். இதையடுத்து குப்புசாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை அவரது குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது குப்புசாமியின் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த அவரது மனைவி சரஸ்வதி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த அவரது உறவினர்கள் பார்த்தபோது அவரும் இறந்து விட்டது தெரிய வந்தது. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் கண்டாச்சிபுரம் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story