தஞ்சை அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை பாலத்தின் அடியில் புதைத்த மனைவி
தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு மாத்திற்குப் பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை,
தஞ்சை அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில், தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு மாத்திற்குப் பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவிடைமருதூர் அடுத்த திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த பாரதி - திவ்யா தம்பதிக்கு, 2 பிள்ளைகள் உள்ளன. சென்னையில் தங்கியிருந்து டீக்கடை ஒன்றில் பாரதி பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த டேவிட் என்ற சதீஷ்குமார் என்பவரிடம் திவ்யா தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, பாரதி மாயமாகியுள்ளார். இதுகுறித்து உறவினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரின் கழுத்தை நெறித்துக் கொன்று, பாலத்தின் அடியில் புதைத்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து திவ்யா மற்றும் சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், பாலத்திற்காக போடப்பட்ட சாலையில் புதைக்கப்பட்ட பாரதியின் உடலை தோண்டி எடுத்து, மருத்துவர்கள் உதவியுடன் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.