ஊர் காவல்படை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி அருகே குடும்பத் தகராறில் ஊர் காவல்படை வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே குடும்பத் தகராறில் ஊர் காவல்படை வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஊர் காவல்படை வீரர் மனைவி
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் சிவசுபன் (வயது 28). இவர் ஊர்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சிவசுபன் வீட்டுக்கு வெளியில் வந்து படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலையில் சிவசுபன் வீட்டிற்குள் சென்றபோது மனைவி சசிகலா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குடும்ப தகராறில் மனமுடைந்த சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பத் தகராறில் ஊர்காவல்படை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏறப்படுத்தியது.