பூப்பறிக்க சென்ற சிறுமியை காட்டுப்பன்றி தாக்கியது


பூப்பறிக்க சென்ற சிறுமியை காட்டுப்பன்றி தாக்கியது
x

சாப்டூர் அருகே பூப்பறிக்க சென்ற சிறுமியை காட்டுப்பன்றி தாக்கியது/

மதுரை

பேரையூர்,

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா லாலாபுரத்தை சேர்ந்தவர் பழனிமுருகன். இவருடைய மகள் ரதி (வயது 12). இவர் 6-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று காலை தங்களது தோட்டத்தில் மல்லிகைப்பூ பறிப்பதற்காக தனது பெற்றோர் மற்றும் அக்காளுடன் சென்றுள்ளார். பூ ப்பறித்துக் கொண்டு இருக்கும்போது காட்டுப்பன்றி ஒன்று சிறுமி ரதியை கடித்து தாக்கி விட்டு தப்பி விட்டது. இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. அங்கு மருத்துவமனையில் சிறுமிக்கு காயம்பட்ட இடங்களில் 30 தையல் போடப்பட்டது. சிறுமி தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாப்டூர் வனச்சரக அலுவலர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினர்.


Related Tags :
Next Story