தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x

மானூர் பகுதியில் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள கானார்பட்டி, ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். சம்பவத்தன்று தோட்டத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதுதொடர்பாக மானூர் லட்சுமியாபுரத்தை சேர்ந்த விவசாயி இளையராஜா கூறுகையில், "எனது தோட்டத்தில் 4 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளேன். மக்காச்சோளம் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து 2 ஏக்கர் பரப்பிலுள்ள மக்காச்சோள பயிர்களை நாசமாக்கி விட்டது. கடன் வாங்கி 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன். தற்போது ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறேன். அரசு தலையிட்டு எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.


Next Story