தொழிலாளர்களை துரத்திய காட்டுயானை


தொழிலாளர்களை துரத்திய காட்டுயானை
x
தினத்தந்தி 14 May 2023 1:00 AM IST (Updated: 14 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களை துரத்திய காட்டுயானை

நீலகிரி

பந்தலூர்

கொளப்பள்ளி அரசு தேயிைல தோட்ட(ரேஞ்ச்-1) பத்துலைன்ஸ் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் நேற்று முன்தினம் இரவில் தொழிலாளர்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் அவசர தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை பத்துலைன்ஸ் அருகே அரசு தேயிலை தோட்ட தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்து தொழிலாளர்களை துரத்தியது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதை அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் காட்டுயானையை விரட்டியடித்தனர். ஆனாலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல், அருகில் உள்ள சாமியார்மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story