தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம்


தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம் செய்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, தென்னை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாபநாசம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானையானது அனவன்குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியனுக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்தது. அங்கிருந்த தென்னை மரங்களை வேருடன் சாய்த்து, அதன் குருத்துகளை தின்று சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று, சாய்க்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டனர்.


Next Story