கடையை சேதப்படுத்திய காட்டு யானை


கடையை சேதப்படுத்திய காட்டு யானை
x

கொடைக்கானல் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று கடையை சேதப்படுத்தியது.

திண்டுக்கல்

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, கணேசபுரம், 5 வீடு, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேத்துப்பாறை கிராமத்தில் செல்வராஜ் என்பவரின் கடையை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியது.

அப்போது கடையில் தூங்கிக் கொண்டிருந்த அவர் எழுந்து, சத்தம் போட்டதால் யாைன அங்கிருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை தள்ளி விட்டு கிராமத்திற்குள் புகுந்தது. காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களே யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, காட்டு யானைகளால் விளைநிலங்கள் அடிக்கடி சேதப்படுத்தப்படுகின்றன.

கிராமங்களில் உலா வரும் யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பேத்துப்பாறை கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றனர்.


Next Story