ேபாலீஸ் ஏட்டு சைகைக்கு கட்டுப்பட்டு ஓரமாக சென்ற காட்டெருமைகள்
ேபாலீஸ் ஏட்டு சைகைக்கு கட்டுப்பட்டு ஓரமாக சென்ற காட்டெருமைகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே 2 தனியார் பள்ளிகள் உள்ளது. இங்கு காலை, மாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டி போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏட்டு பாலசுப்பிரமணியம் பணியில் ஈடுபட்டார். அப்போது சாரல் மழை பெய்தது. இதற்கிடையே சாலையின் குறுக்கே 2 காட்டெருமைகள் உலா வந்தன. இதை கண்ட ஏட்டு, அதன் முன் சென்று வாகனங்களை ஓரமாக செல்வதற்கு கைகை காண்பிப்பது போல, காட்டெருமைகள் ஓரமாக செல்வதற்கு சைகை காண்பித்தார். இதைதொடர்ந்து சைகைக்கு கட்டுப்பட்டு காட்டெருமைகள் சாலையை விட்டு ஓரமாக சென்று, தாழ்வான பகுதிக்கு சென்று மறைந்தது. இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story