பெண்ணுக்கு பன்றி காய்ச்சல்


பெண்ணுக்கு பன்றி காய்ச்சல்
x

கொள்ளிடம் அருகே பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மனைவி வளர்மதி (வயது56). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து வாரமாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் காய்ச்சல் குறையவில்லை. இதை தொடர்ந்து வளர்மதி புச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வளர்மதிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் வளர்மதி குணமடைந்து வருகிறார். இன்னும் 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்தார். வளர்மதிக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மாங்கனாம்பட்டு கிராமத்தில் நேற்று கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சுந்தரம், வெங்கட்பிரசாத், பவித்திரன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஊழியர்கள் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் சுகாதார ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தும், கொசு மருந்து அடித்தும் சுகாதார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.


Next Story