கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க முதல் மாடியில் இருந்து குதித்த பெண்

கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க முதல் மாடியில் இருந்து குதித்த பெண்
x

ஆம்பூரில் துணி காயவைப்பதற்காக சென்றபோது நகை, பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனிடமிருந்து தப்பிக்க பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்தார். கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் வீட்டில் 10 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றான்.

திருப்பத்தூர்

மாடியில் இருந்து குதித்தார்

ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வி (வயது 33). இவர் வீட்டில் துணி துவைத்து காயவைப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி தாமரைசெல்வியிடம் பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க தாமரை செல்வி முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். கீழே குதி்த்ததில் படுகாயம் அடைந்த தாமரை செல்வியை அப்பகுதி மக்கள் மீட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 பவுன் நகை திருட்டு

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். சென்னையில் அரசு கால்நடை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு சான்றோர்குப்பத்தில் உள்ளது. வீட்டின் எதிரே மேம்பால பணிகள் நடந்து வருவதால் வீட்டிற்கு செல்ல வழி இல்லாமலை அதே தெருவில் சில வீடுகள் தள்ளி மனோகர் குடும்பத்தினர் தங்கியிருந்தனர். நேற்று தங்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

Next Story